அன்றும் கண்டேன். அவளது அழகிய இடையை வளைத்து வளைத்து வீதியில் நடந்து செல்வதை. திடீர் என்று அவளின் அரையில் இருந்து இருட்டு கை காட்டும் போதே எனக்குள் ஏதோ ஒன்று தோன்றியது. நான் நினைத்து தான். ஆனால் இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று தான் நான் நினைக்க வில்லை. இப்பொழுது அவள் அங்கு ஆதரவற்று கிடக்கின்ற அனாதை போல கிடக்கிறாள். இவ்வளவு தான்.
ஒரு அழகிய ஆண் குழந்தையை ஈன்று பெண்களிற்கே உரிய மிகவும் சிறந்த தாய்மையை அவளும் அடைந்தாள். இரவு பகலாக தூங்காமல் கண் விழித்து அவனை பார்த்துக் கொண்டு அவனது சிரிப்பில் தனது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருந்தாள். அந்த சிங்கக் குட்டியும் பாடசாலை செல்லும் வயதையும் அடைந்து முதல் நாளிலேயே நண்பர்களுடன் சேர்ந்து பழகி வருகிறான். அவன் தினமும் அம்மா எனக்கும் என் உற்ற நண்பர்களை போல ஒரு நங்கை வேண்டும் என்றான்.
நானும் அப்போது "இந்த காலத்தல் எந்த கடையில் தான் குழந்தைகளை விற்கின்றனர்?" என்று கூறி அதனை புறக்கணிப்பேன்.
அவனுக்கு அறியும் வயதிலும் நங்கை ஒன்று வேண்டும் என்பதே அவனது ஆசை என உள்ளங்கை நெல்லிக்கனி போல அறிந்து கொண்ட தாய் இந்த உலகத்திற்கு வர வழைத்தவர்களையே இழந்து, சந்தோஷத்தை பறிகொடுத்து, வாழ வேண்டும் என்பதற்காக வாழ்ந்து கொண்டு இருக்கும் அநாதைகளை எந்த ஒரு குறையும் இன்றி அன்பு, அரவணைப்பு என்பவற்றை வழங்குகின்ற அநாதை இல்லத்திற்கு சென்று ஒரு அழகான பெண் குழந்தையை தத்தெடுத்தனர்.
அந்த குழந்தையோ வானில் இருந்து இறங்கி வந்த இலட்சுமி தேவி போலவே இருந்தாள். அந்த தேவதை வந்த பிறகு சிங்கக்குட்டியான அவனை தென்படுவதே கஷ்டம் ஆகிட்டு. குடும்ப கஷ்டத்திற்காக வெளிநாடு சென்ற அவனது அம்மாவின் கணவன் இன்னொரு குழந்தையின் தாயிற்கும் கணவராக இருக்கிறார். இதனால் மொத்த குடும்ப பொறுப்புக்களையும் தனிமையில் தைரியத்துடன் இருக்கும் தாயே பார்த்துக் கொண்டு இருக்கிறாள்.
வீட்டில் தனியாக இருக்கும் அன்புத் தங்கைக்கு அப்பாவை போல் பாதுகாப்பு வழங்கி அவளுடன் துணைக்கு இருப்பான் அவனது அண்ணன். வீட்டு வேலைகளுக்கு சென்று தனது பிள்ளைகளின் படிப்புத் தேவைக்கே அனைத்து காசும் முடிந்து விடுவதை உணர்ந்த அவள் வேலையோடு வேலையாக இயந்திரம் போல் முதலாளிகளின் அனைத்து வேலைகளையும் செய்து கடைகளுக்கு அவளது பொன்னான கைகளால் சமைத்து அமுதம் போன்ற உணவுகளை விற்கின்றாள். இதனால் வரும் பணத்தை தீபாவளி, தைப்பொங்கல் என ஒவ்வொரு முறைக்கும் வெவ்வேறு வண்ண வண்ண ஆடைகளை அவர்களிற்கு பிடித்தவாறு வாங்கிக்கொடுத்து மகிழ்கிறார். இது வரையில் அவளுக்கென்று ஒரு துணியோ அணிய புடவையோ வாங்கவில்லை.
பாடசாலைகளை முடித்து விட்டு உயர் பதவிகளை செய்து தாய் பெருமைப்படும் அளவில் சிங்கம் போன்ற மன வலிமையான மூத்தவன் பல உயிர்களையும் காப்பாற்றும் வைத்தியரானான். அவனது அன்பிலும், அரவணைப்பிலும் வளர்ந்த தங்கை ஊரையே திருத்துவேன் என்றும், குற்றவாளிகளை தண்டிப்பேன் என்ற நோக்குடனும் அவள் அணிகிறாள் கருப்பாடையை. இவை எல்லாம் அவளை சந்தோஷப்படுத்தின. அடுத்த வீட்டாருடன் கதைக்கும் போதும் பெருமையடித்துக் கொண்டாள்.
ஆனால் எல்லாம் கொஞ்ச நாட்களுக்கு தான் என்று அவளுக்கு தெரிய வில்லை.
மூத்தவன் வெளிநாடு சென்று அங்கு பல உயிர்களையும் காப்பாற்றினான். பின் அங்கே ஒரு துணையையும் தேடிக் கொண்டான். அண்ணனோ தங்கைக்காக அங்கிருந்து கொண்டே உள் நாட்டினுள் மாளிகை போன்ற வீட்டினை கட்டினான். அழகிய பெரிய பிரம்மாண்டமான வீடு அது. மழை வந்தால் பாத்திரம் வைத்து எப்போது வீட்டிற்குள் மழை நீர் வரும் என எதிர் பார்த்து நிற்காது நிம்மதியாக அவர்கள் அங்கு வாழ்ந்து வருகின்றனர். அண்ணனும் அவனின் தங்கையின் திருமணத்தை அழகான சோடியுடன் திருவிழா போன்று கோலாகலமாக நடத்தினான்.
திருமணம் சிறப்பாக நடந்தேறியது. வருடங்களும் பல கழிந்தன. அவளது தாயை ஒரு வேலைக்காரி போல் எல்லா வேலைகளையும் செய்யுமாறு கட்டளை பிறப்பித்தாள். அவளது சாப்பாட்டு தட்டை கூட எடுத்து வைக்க மாட்டாள். அடுத்த நாள் அணிய வேண்டிய ஆடைகளை சுருக்கம் இல்லாமல் முன் இரவே எடுத்து வைக்க வேண்டும். வீட்டை அழகாகவும், நேர்த்தியாகவும் வைத்திருக்க வேண்டும் என்று அடிமை போல் நடத்துவாள் தாயை.
அன்று அவளது கால் வலிக்காக செட்டியில் அமர்ந்து தைலம் தேய்த்து கொண்டு இருந்தாள். அன்பின் சின்னமான அவளை நோக்கி "நீ எப்படி இதில் அமர்ந்து கொள்கிறாய்? வேலைக்காரியான நீயும் நானும் சமனா? என்று கத்தியவுடன் என் வளர்ப்பு மகளை தான் பெற்ற மகள் போல கட்டிக் காத்ததற்காக தன்னை நன்றாக கவனிப்பாள் என்று பேராவளுடன் மனக் கோட்டை கட்டியிருந்த அத் தாயின் உள்ளம் மகளின் கடும் சொற்களை கேட்ட அந்நொடி கம்பீரமாக நிலைத்து நிற்கும் கோபுரம் காற்றின் வேகத்தில் சுக்கு நூறாக நிலை குலைந்தது போல் அந்நொடி நிலை குலைந்தது.
இவற்றை எல்லாம் மூத்தவனிடம் சொல்லி கவலைப்படுவதா? இல்லை, அவனாவது அங்கு நிம்மதியாக இருக்கட்டும் என்று மனதிற்குள்ளே அடக்கி வைப்பதா? என்று இன்னும் அவர்களைப் பற்றியே யோசித்துக்கொண்டு இருக்கிறாள் அவள். பொழுதும் புலர்ந்தது. திடீர் என்று அறிவுக்கண் திறந்தது போல் "அண்ணா உங்களுடன் ஏதோ பேச வேண்டுமாம்" என்று தொலைபேசியை நீட்டினாள்.
வெளிநாட்டில் உள்ள அவனோ உடல் நலத்தை விசாரித்துக்கொள்ள முன்பே "அம்மா! தங்கைக்கு ஏன் நீங்க இவ்வளவு தொந்தரவு கொடுக்குற. அவள் அங்கு குடும்பமா சந்தோஷதோட இருக்குறது பிடிக்கலையா?" என்றான். அன்னையின் கண்களில் இருந்து நீர் வடிந்து ஓட மனதை கல்லாக்கிக் கொண்டு, "மகனே! முதியோர் பராமரிப்பில் ஒரு விண்ணப்பம் போடச்சொல்" என்று கூறி அவளது கிழிந்து போன பழைய துணிமணிகளை எடுத்து கொண்டு வீதியே அதிரும் படிக்கு நடையை காட்டுகிறாள் முதியோர் பராமரிப்பு இல்லத்திற்கு .
தான் வளர்த்த ஒருவன் வெளியூரிளும் இன்னொருவன் உள்ளூரில் பெரிய மாளிகையிலும் நிற்கின்றனர் என்று புகழ் பாடத்தான் வேண்டும். யாராலும் அவளின் முதுமையை சந்தோஷப்படுத்தவே முடியாது போனது.
கருத்துகள்
கருத்துரையிடுக